என் மண் என் மக்கள் பாத யாத்திரை திருவள்ளூர் மாவட்டம் ;

0
110

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்ப ஆட்சியை ஒழிப்பார் எனவும், அதனால் வடக்கு தெற்கு என பிரிவினைவாதம் செய்வதாகவும்,
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும், ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நிலுவை என்பது தமிழகத்தில் அனைத்து தொழில்களையும் பாதிக்கும் பிரச்சினை எனவும், கொங்கு பகுதியில் ஜவுளி மில்களுக்கு மட்டும் ₹100 கோடி ஜிஎஸ்டி ரீபண்ட் நிலுவை தொகை நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் என் மக்கள் பாத யாத்திரை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் பகுதியில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

என் மண் என் மக்கள் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து பாத யாத்திரை நடத்தி வருகிறார்.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 8 மற்றும் 9 ஆகிய 2 தேதிகளில் பாத யாத்திரை நடத்தி வரும் அண்ணாமலை, இன்று காலை கும்மிடிப்பூண்டியில் பாத யாத்திரை நடத்தினார்.இதனைதொடர்ந்து பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூரில் இன்று மாலை பாத யாத்திரை நடத்த இருந்த நிலையில் காவல் துறையினர் அதற்கு அனுமதி மறுத்தனர்.இதனையடுத்து பரப்பரை வாகனத்திலேயே அண்ணாமலை பொது மக்களிடம் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,
காங்கிரஸ் ஓட்டு அரசியலுக்காக அப்துல்லா காஷ்மீர் முதலவராக கொண்டு வரப்பட்டார் எனவும்,

இந்தியாவுக்கு வலிமையான தலைவர் தேவைப்படுவதால் மோடி வர வேண்டும் எனவும்,

குடும்ப ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும் எனவும், முதல்வர்கள் டெல்லிக்கு சென்று ஆர்பாட்டம் நடத்துவது போன்ற கேவலமான நிலை வேறெங்கிலும் இல்லை எனவும் தெரிவித்தார்.

கர்நாடகாவில் அனைத்து இடங்களிலும் பாஜக வெல்லும் எனவும,
192 சதவீதம் 10 ஆண்டுகளில் வரி பங்கீடு மோடி ஆட்சியில் வழங்கப்பட்டது எனவும்,

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்ப ஆட்சியை ஒழிப்பார் எனவும், அதனால் வடக்கு தெற்கு என பிரிவினைவாதம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும், ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நிலுவை என்பது தமிழகத்தில் அனைத்து தொழில்களையும் பாதிக்கும் பிரச்சினை எனவும், கொங்கு பகுதியில் ஜவுளி மில்களுக்கு மட்டும் ₹100 கோடி ஜிஎஸ்டி ரீபண்ட் நிலுவை தொகை நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

32 மாதங்களாக திமுக அரசு இதுவரை ஒருப்படியாக எதுவும் செய்யவில்லை எனவும், கடந்த 2019-இல் நாடாளுமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட 295 வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றி விட்டார் எனவும்,
2014-இல் ராமர் கோயில் கட்டி இருக்கலாம்; ஆனால் 2019-இல் ஆரம்பிக்கப்பட்டு முதல் பத்திரிகை இஸ்லாமியருக்கு கொடுக்கப்பட்டது எனவும், 10 ஆண்டுகளாக செய்யும் நடவடிக்கைகளை மட்டும் சொல்லி ஆட்சி நடத்துவது பாஜக ஆட்சி எனவும், இந்தியாவில் முதன்முறையாக மீன்வளத்துறை அமைச்சகத்தை உருவாக்கியது பாஜக அரசு எனவும்,
110 கோடி மக்களுக்கு அனைவருக்கும் பிரச்சினை இல்லாமல் தடுப்பூசி போட்டது இந்தியாவில் மட்டுமே எனவும் தெரிவித்த அவர், 4 ஆண்டுகளாக தொகுதி பக்கம் செல்லாத திருவள்ளூர் எம்பி ஜெயகுமார்,
அதானி ராமர் கோயிலை திறந்து வைத்தார் என கூறுவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் 12 இடங்களில் ஜெயிக்கும் என அழகிரி கூறுகிறார்;ஆனால், இந்தியாவில் 12 இடங்களில் கூட காங்கிரஸ் ஜெயிக்காது என தெரிவித்தார்.

திமுகவின் பஜனை கோஷ்டி காங்கிரஸ் கட்சி எனவும் தெரிவித்த அவர்,
ஊழலை எதிர்த்து பாஜக பேச ஆரம்பித்த போது பங்காளி கட்சிகளுக்கு பயம் வந்து விட்டது எனவும் தெரிவித்தார்.

நான் லேகியம் விற்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.ஆமாம், நான் லேகியம் தான் விற்கிறேன்; லஞ்சம், குடும்ப ஆட்சி, சாதி அரசியல், அடாவடி அரசியல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக லேகியம் விற்கிறேன்; 4 பீடைகளை ஒழிக்க லேகியம் விற்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் நரேந்திர மோடி எனவும், யார் வேட்பாளாராக இருந்தாலும், மோடி பிரதமராக வாக்களியுங்கள்; அந்த வேட்பாளர் மோடிக்கு வேலை செய்வார்; மோடி உங்களுக்கு வேலை செய்வார் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here