*இயற்கை வைத்தியம்*

0
258

*இயற்கை வைத்தியம்*

*வயிற்று வலிக்கு*

எந்த வகையான வயிற்று வலியாக இருந்தாலும் அரை டேபிள் ஸ்பூன் சீரகம், சிட்டிகை உப்பு இரண்டையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் அரை மணி நேரத்தில் வலி போய்விடும்.

*மூட்டு வலி*

முதுமையால் ஏற்படும் மூட்டுவலிக்கு வீட்டிலேயே நிவாரணம் இருக்கு. வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றைச் சூடாக்கி இளம் சூட்டில் தேய்க்க மூட்டு வலி மறைந்துவிடும்.

 

*வாயுத்தொல்லை நீங்க*

சோம்பு, சீரகம் இரண்டையும் முதல் நாள் இரவு கொதிக்க வைத்து அதை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்தால் வாயுத் தொல்லை, அசிடிட்டி நீங்கும்.

 

*உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல் நீங்க*

சுக்கு, மிளகு, மல்லி, மூன்றையும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல் ஏற்படும் போது இந்த தூளை வெந்நீரில் போட்டுக் கொதிக்க வைத்து குடிக்க, உடனே நிவாரணம் கிடைக்கும்.

*ஜலதோஷம், சளி நீங்க*

குடிநீர்ப் பானையில் சில துளசி இலைகளைப் போட்டு வையுங்கள். இந்த நீரை தினமும் அருந்தி வந்தால் ஜலதோஷம், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.

 

*வாந்தி, குமட்டல், மயக்கம் நீங்க*

வேப்பம்பூவை துவையலோ, ரசம் வைத்தோ சாப்பிட்டு வந்தால் வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றவை வராது. பித்தப்பிரச்னைகளை குறைப்பதுடன் உடலில் உள்ள கெட்ட கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் வேப்பம் பூவிற்கு உண்டு.

 

*கால் ஆணி நீங்க*

வெள்ளைப் பூண்டை விழுதாக்கி இரவில் படுக்கும் முன் காலில் உள்ள ஆணியின் மீது கட்டி வைத்து காலையில் கழுவி விடவும். தொடர்ந்து செய்து வர ஒரு வாரத்தில் குணம் தெரியும்.

 

*ஜலதோஷச மூக்கில் நீர்வடிதல் நீங்க*

துளசி, இஞ்சி கலந்த சாறுடன் தேங்காய்ப்பால் சிறிது சேர்த்து மூன்று வேளையும் குடித்துவர ஜலதோஷத்தால் மூக்கில் நீர்வடிவது நின்றுவிடும்.

 

*சளி பிரச்சனைக்கு*

இளஞ்சூடான நீரில் பத்து புதினா இலைகளைப் போட்டு நல்லெண்ணெய் குளியல் போட்டால் போதும். உடம்பில் உள்ள சளிப்பிரச்னைகள்
நீங்கிவிடும்.

 

*மூட்டு வலி நீங்க*

கடுகு எண்ணெய்யை வெதுவெதுப்பாகச் சூடாக்கி அதனுடன் சமஅளவு வெங்காயச்சாறு கலந்து மூட்டுகளில் தடவி வர மூட்டுவலி நீங்கிவிடும்.

 

*நரம்புத் தளர்ச்சி குணமடைய*

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை முருங்கைக் கீரையைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் விரைவில் பூரண பலன் கிடைக்கும்.

 

*மாதவிலக்கு ரத்தப்போக்கு குறைய*

சோறு வடித்த நீரில் மோர் கலந்து பருகினால் பெண்களுக்கு மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.

 

*சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்க*

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும்போது கடுப்பு, எரிச்சல் ஏற்படும். அது குணமாக, பாதி அளவு எலுமிச்சைப் பழச்சாறுடன் எட்டு மடங்கு வெந்நீர் கலந்து குடித்து வந்தால் எரிச்சல், கடுப்பு இல்லாமல் சிறுநீர்  வெளியேறும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here