ஆரணி தனியார் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, 17 வயது சிறுவன் கைது.

0
47

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணியில் மீன் மார்க்கெட் தெருவில் ஆங்கிலப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில்,இப்பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுமிக்கு அதே பள்ளியில் வேனில் கிளீனராக பணியாற்றி வரும் 17 வயது சிறுவன் நேற்று பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் அழுது கொண்டே
நடந்த கொடுமைகள் குறித்து கூறியுள்ளார்.இந்நிலையில், நேற்று மதியம் சிறுமியின் பெற்றோர்கள் ஆங்கிலப் பள்ளியின் தாளாளரிடம் இது குறித்து நியாயம் கேட்டுள்ளனர்.அப்பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தின் உச்சகட்டமாக சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அந்த சிறுவனை சுற்றி வளைத்து பிடித்தனர்.பின்னர்,ஆரணி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.எனவே, போலீசார் அந்த சிறுவனை ஊத்துக்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர்.அந்த சிறுவனை ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தினர் விசாரணை செய்த நீதிபதி போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர் இந்தச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here