



சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோயில் தெரு. வள்ளுவர் நகர் மற்றும் பாரதியார் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா– இந் நிகழ்ச்சியில் விழாவின் முதல் நிகழ்ச்சியாக25-10-2025 அன்று மாலை 6 மணி அளவில் குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி மிகவும் சிறப்பான நடைபெற்றது. அதன்பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சி 27-10-2025 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதன்பின்னர் மறுநாள் 28-10-2025 அன்று ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊர் மக்களும் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அன்றைய தினம் பகல் 12 மணி அளவில் சமபந்தி அன்னதானம் நடைபெற்றது. அதன்பின்னர் மாலை 6:00 மணி அளவில் சுவாமி வீதி உலா புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.விழா குழுவினர்கள் இந்த விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.












