சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை உள்ளது இங்கு இதய ம் நுரையீரல் கல்லீரல் எலும்பு முறிவு நரம்பியல் கண் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது மேலும் குழந்தைகளுக்கு என்று தனியாக சிகிச்சை பிரிவு செயல்படுகிறது சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுபவர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஆயிரம் கணக்கானோர் சிகிச்சை மேற்கொள்ள தினம் தோறும் வருவது வழக்கம் வெளி மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற வருவார்கள் சிகிச்சை பெறுவதற்கான அட்டை கணினி மூலம் பதிவு செய்து வழங்கப்படுவது வழக்கம் ஆனால் கடந்த சில நாட்களாக சரிவர கணினி வேலை செய்யாததால் ஓபி அட்டை பெறுவதில் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள் இன்று காலையில் சிகிச்சை பெற வந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒபி அட்டை பெற முடியாமல் கணினி பழுது அடைந்ததாக கூறியதின் பேரில் காத்துக் கிடந்தனர் நோயாளிகள் வராததால் மருத்துவர்கள் மருத்துவம் பார்க்காமல் இருந்தனர் மேலும் நேற்று விடுமுறை முடிந்து இன்று வந்த நோயாளிகள் அவசர சிகிச்சை நோயாளிகள் மாதம் மாத்திரை வாங்க வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள் இதற்கு கணினி வேலை செய்யவில்லை என்றாலும் கையில் எழுதி ஓபி அட்டை வழங்கினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்பது நோயாளிகளின் கோரிக்கையாகும். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Home Uncategorized அரசு மருத்துவமனையில் கணினி இயங்காததால் ஓபி சீட் வழங்குவதில் தாமதம் சிகிச்சை பார்க்க முடியாமல் நோயாளிகள்...